/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3.25 லட்சம் கிலோ பச்சைபயறு கொள்முதல் செய்ய இலக்கு
/
3.25 லட்சம் கிலோ பச்சைபயறு கொள்முதல் செய்ய இலக்கு
ADDED : ஏப் 08, 2025 06:25 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நடப்பாண்டு 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகள் விளைவித்த பச்சைப்பயறு, மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. நடப்பாண்டு, 3.25 லட்சம் கிலோ பச்சைபயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒருகிலோ பச்சைப்பயறு 86.82 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். செங்குன்றம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்- 2.75 லட்சம் கிலோ, திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டையில், தலா 25 ஆயிரம் என, தரம் பிரிக்கப்பட்ட 3.25 லட்சம் கிலோ பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகியவற்றுடன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரிடம் பதிவு செய்து விற்பனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.