/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 05, 2024 11:26 PM

திருமழிசை, விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூர் பகுதியில் டாஸ்மாக் கடை எண்:11405ல், விற்பனையாளராக ஆர்.சக்திவேல் பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த டிச.1ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, 'பெஞ்சல்' புயல் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தார்.
இவருக்கு நிவாரணம் கேட்டு. திருமழிசை டாஸ்மாக் கிடங்கில், ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச் செயலர் தனசேகர் தலைமையில், ஐ.என்.டி.யூ.சி., மாநில தலைவர் பாலாஜி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் இவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப நபர் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்.
இனிவரும் காலங்களில் பேரிடர் காலங்களில் ஆபத்தான நேரத்தில் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் பணி செய்ய நிர்ப்பந்திக்கூடாது என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், திருவள்ளூர் கிழக்கு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டமைப்பினர் பங்கேற்று, மாவட்ட மேலாளரிடம் கோரிக்களை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வெள்ளவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.