/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 21, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், 22 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரமாக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல், சம ஊதியம் வழங்க வேண்டும்.
டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

