/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டாஸ்மாக் அதிகாரிகள் சமரசத்தால் ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
/
டாஸ்மாக் அதிகாரிகள் சமரசத்தால் ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
டாஸ்மாக் அதிகாரிகள் சமரசத்தால் ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
டாஸ்மாக் அதிகாரிகள் சமரசத்தால் ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
ADDED : நவ 13, 2025 08:23 PM
திருமழிசை: திருமழிசையில் டாஸ்மாக் குடோன் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்த இருந்த நிலையில், அதிகாரிகள் சமரசத்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் சரக்குகளுக்கு, 'க்யூ.ஆர்., குறியீடு' மூலம் பணம் வாங்க டாஸ்மாக் நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. சில இடங்களில் தொழில்நுட்ப பிரச்னையால், பணம் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம், க்யூ.ஆர்., குறியீடு வழியாக பணம் வாங்காத, பாடி பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளின் சூப்பர்வைசர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக தகவல் வந்தது.
மேலும், பட்டாபிராம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் குடோனுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள், 150க்கும் மேற்பட்டோர், நேற்று திருமழிசை டாஸ்மாக் குடோன் முன் குவிந்தனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரேணுகா விரைந்து வந்து, ஊழியர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், 'எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

