/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
/
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : நவ 13, 2025 08:23 PM
பொதட்டூர்பேட்டை: கவுன்சிலர்கள் கூட்டத்தில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு 1 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், செயல் அலுவலர் அரிஹரகார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல், நுாலக விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, 1 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சொரக்காய்பேட்டை மற்றும் மேலப்பூடியில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து பொதட்டூர்பேட்டைக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையங்களில், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் வாயிலாக மின்தடை ஏற்பட்டாலும், பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.