/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு
/
அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு
அரசு மருத்துவமனையில் நீரிழிவு நோய் விழிப்புணர்வு
ADDED : நவ 13, 2025 08:22 PM
திருவள்ளூர்: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று, நீரிழிவு நோய் விழிப்புணர்வு வாரம் துவங்கியது.
மருத்துவ கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமை வகித்து பேசுகையில், “நீரிழிவு நோய் என்பது கட்டுப்படுத்தக் கூடியது; சரியான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் மருந்து உட்கொள்வதும், மருத்துவ பரிசோதனை செய்வதும் முக்கியம்,” என்றார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர், துணை மருத்துவ கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் பொது மருத்துவ துறை தலைவர் ஆகியோர், பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறி, தடுப்பு முறை, மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கினர்.
மேலும், மருத்துவ மாணவர்கள் 'நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை' என்ற தலைப்பில் சிறு நாடகம் நடத்தினர்.

