/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் டாஸ்மாக் கடைகளால் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு
/
பொன்னேரியில் டாஸ்மாக் கடைகளால் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு
பொன்னேரியில் டாஸ்மாக் கடைகளால் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு
பொன்னேரியில் டாஸ்மாக் கடைகளால் வியாபாரிகள், மக்களுக்கு இடையூறு
ADDED : ஜூலை 14, 2025 11:28 PM
பொன்னேரி,பொன்னேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பொன்னேரி நகரத்தில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், செங்குன்றம் சாலை, தடப்பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
இவை, அதிக போக்குவரத்து உள்ள மாநில நெடுஞ்சாலைகளின் அருகிலும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் இருக்கின்றன. இங்கு வரும் 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று அரட்டை அடிக்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் பெண்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோல, டாஸ்மாக் கடைகளுக்கு வருவோர், தங்களது வாகனங்களை மாநில நெடுஞ்சாலையோரங்களில், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
டாஸ்மாக் கடைகளின் அருகில் செயல்படும் சட்டவிரோதமான குடிமையங்களில், அதிகாலை மது விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசாரும், எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மார்க்கெட், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி, இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.