/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்றும், நாளையும் வரி வசூலிப்பு முகாம்
/
இன்றும், நாளையும் வரி வசூலிப்பு முகாம்
ADDED : ஆக 08, 2025 10:30 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், இன்றும், நாளையும் தீவிர வரி வசூலிப்பு முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள மக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் மற்றும் வணிக வரி ஆகியவற்றை செலுத்தும் வசதிகளை, அரசு தற்போது மிகவும் எளிதாக்கியுள்ளது.
சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் உட்பட அனைத்து வரிகளையும் இணையதளம், மின் பரிவர்த்தனை மற்றும் பி.ஓ.எஸ்., கருவி வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டதில், இன்றும் நாளை 10ம் தேதியும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தீவிர வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.
எனவே, அனைத்து மக்களும், ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி, கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

