/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிக்கு மின் இணைப்பு கோரி முகாமில் மனு அளித்த ஆசிரியர்கள்
/
பள்ளிக்கு மின் இணைப்பு கோரி முகாமில் மனு அளித்த ஆசிரியர்கள்
பள்ளிக்கு மின் இணைப்பு கோரி முகாமில் மனு அளித்த ஆசிரியர்கள்
பள்ளிக்கு மின் இணைப்பு கோரி முகாமில் மனு அளித்த ஆசிரியர்கள்
ADDED : செப் 18, 2025 11:27 PM
பொன்னேரி:அரசு பள்ளிக்கு மின் இணைப்பு கோரி, அரசின் சிறப்பு முகாமில், ஆசிரியர்கள் மனு அளித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பொன்னேரி பாலாஜி நகர் பகுதியில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 170 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். நான்கு கட்டடங்களில், எட்டு வகுப்பறைகள் உள்ளன. நான்கு கட்டடங்களுக்கும் ஒருமுனை மின் இணைப்பு மட்டும் உள்ளது.
தற்போது, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட்டு, 10 கம்ப்யூட்டர்கள், இன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
ஒரே மின் இணைப்பில் நான்கு கட்டடங்களில் உள்ள மின் விசிறி, மின் விளக்கு, கம்ப்யூட்டர் ஆகியவற்றை இயக்கும்போது, அடிக்கடி பழுது ஏற்படுகிறது.
எனவே, மும்முனை இணைப்பு கோரி, மின் வாரியத்தில் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் 'டிபாசிட்' தொகை கட்ட மறுப்பதால், ஆறு மாதங்களாகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.
இதனால் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியாமல் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொன்னேரியில் நேற்று முன்தினம் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், பள்ளி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள், மும்முனை மின் இணைப்பு கேட்டு மனு அளித்தனர்.
அரசு பள்ளிக்கு மின் இணைப்பு பெறவே, அரசின் சிறப்பு முகாமில் மனு கொடுக்கும் நிலை ஏற் பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.