ADDED : அக் 25, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பெரவள்ளூர் கிராம சுடுகாடு அருகே கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகம் ஏற்படும்படி நின்றுக்கொண்டிருந்த நபரை சோதனையிட்டனர். அவரிடம் விற்பனைக்கு வைத்திருந்த 100 கிராம கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராகேஷ், 21, என்பது தெரிந்தது. வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.