ADDED : ஏப் 03, 2025 07:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்,:திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார், 33. திருவள்ளூரில் பிரியாணி கடையில் பணி செய்து வரும் இவர் நேற்று முன்தினம் காலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காக்களூர் பைபாஸ் சாலையின் குறுக்கே வந்த டி.வி.எஸ். ஆக்டிவா இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது .
இதில் படுகாயமடைந்த அசோக்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.