/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீண்டும் மீண்டும் முளைக்கும் தற்காலிக கடைகள் திருத்தணி சாலையில் தொடரும் வாகன நெரிசல்
/
மீண்டும் மீண்டும் முளைக்கும் தற்காலிக கடைகள் திருத்தணி சாலையில் தொடரும் வாகன நெரிசல்
மீண்டும் மீண்டும் முளைக்கும் தற்காலிக கடைகள் திருத்தணி சாலையில் தொடரும் வாகன நெரிசல்
மீண்டும் மீண்டும் முளைக்கும் தற்காலிக கடைகள் திருத்தணி சாலையில் தொடரும் வாகன நெரிசல்
ADDED : ஆக 04, 2025 03:18 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, காந்தி சிலையை அகற்றியும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியத்தால், தற்காலிக கடைகள் மற்றும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டூ - வீலர்களால் நெரிசல் தொடர்கிறது.
திருத்தணி நகராட்சி, ம.பொ.சி., சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இப்பகுதியில், சாலையின் நடுவில், 50 ஆண்டுகளுக்கு முன் காந்தி சிலை நிறுவப்பட்டது. இச்சிலை அருகே, 15க்கும் மேற்பட்டோர் பூ, பழம், காய்கறி போன்ற தற்காலிக கடைகள் வைத்து ஆக்கிரமித்திருந்தனர்.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து, கலெக்டர் உத்தரவின் பேரில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக கடைகளுடன் காந்தி சிலையும் அகற்றப்பட்டது.
பின், சில நாட்கள் மட்டுமே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது. ஆனால், மீண்டும், 10க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. அதுமட்டுமின்றி, இரு சக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், 200 மீட்டரை கடக்க, 20 நிமிடத்திற்கு மேலாகிறது. இது தவிர, நெரிசல் காரணமாக, சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.
காந்தி சிலையை அகற்றியும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மீண்டும் மீண்டும் முளைக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.
அதே போல், சாலையோரம் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களையும், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. எனவே, கலெக்டர் உடனடியாக தலையிட்டு, சாலை ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.