/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு
/
மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு
மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு
மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு
ADDED : மார் 29, 2025 02:25 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச்சாவடியில் இருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான சாலை, தமிழக பகுதிக்கு உட்பட்ட ஆறு வழி விரைவு சாலையாக உள்ளது.
இச்சாலையில், இரு திசையிலும் வாகன போக்குவரத்தின் குரல்வளையை பிடிக்கும் பகுதியாக கவரைப்பேட்டை இருந்து வந்தது. இங்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 2 கி.மீ., மேம்பால பணிகளால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓராண்டுக்கு முன், மேம்பால பணிகள் துவங்கப்பட்ட போதிலும், கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தொய்வால், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்பட்டது.
மூன்று மாதங்களாக மேம்பால கட்டுமான பணிகள் வேகம் எடுத்தது. நடப்பாண்டு மார்ச் மாதம் இறுத்திக்குள் பணிகள் முடிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, தற்போது இறுதிக்கட்ட பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எட்டியுள்ளது. நேற்று காலை, சென்னை மார்க்கத்தில் உள்ள மேம்பாலம், இரு நாள் சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து, திங்கட்கிழமை முதல் ஆந்திரா மார்க்கத்தில் உள்ள மேம்பாலமும், சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூறுகையில், 'சோதனை ஓட்டம் முடிந்ததும், ஒரு லேயர் சாலை அமைத்து, பெயின்டிங் மற்றும் மின்விளக்கு இணைப்பு வழங்கப்படும். அப்பணிகள் முடிந்ததும், மேம்பாலங்கள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.