sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்

/

திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்

திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்

திருத்தணி வள்ளலார் கோவிலில் 25ல் தைப்பூசம்


ADDED : ஜன 20, 2024 11:27 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் வள்ளலார் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் விழா நடந்து வருகிறது. நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும், 25ம் தேதி தைப்பூசம் - அருட்பெருஞ்ஜோதி தரிசன வழிபாடு நடக்கிறது.

அன்று காலை, 6:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றுதல், காலை, 6:30 மணிக்கு அகல் பாராயணம், காலை, 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு திருவருட்பா பாடல்கள் இசை நிகழ்ச்சி, மதியம், 12:10 மணிக்கு, ஏழு திரைகள் அகற்றி அருட்பெருஞ்ஜோதி தரிசனம், இரவு 7:00 மணிக்கு மகாதீப ஆராதனையுடன் தைப்பூச பெருவிழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் பூங்காவனம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us