/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக ஏமாற்றினால் நடவடிக்கை: கலெக்டர்
/
மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக ஏமாற்றினால் நடவடிக்கை: கலெக்டர்
மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக ஏமாற்றினால் நடவடிக்கை: கலெக்டர்
மாற்றுத்திறனாளிக்கு உதவுவதாக ஏமாற்றினால் நடவடிக்கை: கலெக்டர்
ADDED : பிப் 19, 2025 06:28 PM
திருவள்ளூர்:'மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதாக கூறி ஆதாயம் பெறும் நோக்கில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதாக கூறி, தனிநபரோ, சங்கங்கள் அல்லது வேறுவகையிலோ ஆதாயம் பெறும் நோக்கில் செயல்படக் கூடாது.
அவ்வாறு யாராவது கூறினால், மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள், திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளிக்கலாம். அல்லது, 94999 33496 என்ற மொபைல்போனிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
இது தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் -2016ன்படி, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.