/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அறுந்து விழும் மின்கம்பி 'ஒட்டு' போட்ட வாரியம்
/
அறுந்து விழும் மின்கம்பி 'ஒட்டு' போட்ட வாரியம்
ADDED : நவ 21, 2024 12:28 AM

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் ஊராட்சியில் போந்தவாக்கம், புதிய காலனி, பழைய காலனி, தாழம்பாக்கம் காலனி, தர்காஸ்மேடு ஆகிய பகுதிகள் உள்ளன.
இங்கு, 9 வார்டுகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள புதிய காலனியில், மின்கம்பங்கள் முறையான பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது.
மின்கம்பங்களை சூழ்ந்து செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. மின் கம்பிகள் ஒட்டு போட்டு உள்ளதால், அவ்வப்போது கீழே அறுந்து விழுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சில மின்கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, எப்போது உடைந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, உயிர்பலி அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பம், மின்கம்பி ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.