/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரைகுறை சாலைப்பணி கண்டித்து பேருந்தை சிறைபிடித்து மறியல்
/
அரைகுறை சாலைப்பணி கண்டித்து பேருந்தை சிறைபிடித்து மறியல்
அரைகுறை சாலைப்பணி கண்டித்து பேருந்தை சிறைபிடித்து மறியல்
அரைகுறை சாலைப்பணி கண்டித்து பேருந்தை சிறைபிடித்து மறியல்
ADDED : மார் 05, 2024 06:40 AM
சோழவரம்: சோழவரம் - அருமந்தை மாநில நெடுஞ்சாலையில் உள்ள பூதூர் ஊராட்சிக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில், சாலைப்புதுப்பிக்கும் பணி ஒரு மாதமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ஜல்லி கொட்டப்பட்டு, அதன் மீது தார்போடாமல் இருப்பதால், வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு துவக்கப்பள்ளி, குடியிருப்புகளில் புழுதி படிவதால், அங்குள்ளவர்கள் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், நேற்று, கண்டிகை கிராமத்தை சேர்ந்த, கிராமவாசிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற, தடம் எண். 114ஜி, மாநகர பேருந்தை சிறைபிடித்தனர்.
போரட்டத்தின்போது, நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் ஈடுபட்ட கிராமவாசிகளிடம் பேச்சு நடத்தினர். சாலைப்பணிகளை துரிதமாக முடிக்க நெடுஞ்சாலைத்துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
l மீஞ்சூர் ஒன்றியம், ஆவூர் ஊராட்சிக்கு உட்பட்ட எடக்குப்பம் கிராமத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நுாறு நாட்கள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த நுாறுநாள் பணியாளர்கள் மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மனுவாக அளிக்கும் படியும், உரிய விசாரணை மேற்கொண்டு, அனைவருக்கும் நுாறுநாள் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

