/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரும்பேடு முத்துகுமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
பெரும்பேடு முத்துகுமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரும்பேடு முத்துகுமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
பெரும்பேடு முத்துகுமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 17, 2025 02:14 AM

பொன்னேரி:பெரும்பேடு முத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துகுமார சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
கடந்த, 14ம் தேதி கணபதி ஹோமம், கோபூஜையுடன் துவங்கிய விழாவில், மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள், பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை, 10:30 மணிக்கு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, வாண வேடிக்கைகளுடன் வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசுவாமி சன்னிதி கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, முத்து விநாயகர், முத்து பால தண்டாயுதபாணி, மஹாஜோதீஸ்வரர், காலபைரவர், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர் சன்னிதி கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, முத்துகுமாரசுவாமி மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், தீபஆராதனை நடந்தது.
மாலை திருக்கல்யாண வைபவமும், இரவு உற்சவர் திருவீதி உலாவும் நடந்தது.