/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் நிழற்குடை கட்டுமான பணி பகுதி மக்கள், பயணியர் கடும் அவதி
/
கிடப்பில் நிழற்குடை கட்டுமான பணி பகுதி மக்கள், பயணியர் கடும் அவதி
கிடப்பில் நிழற்குடை கட்டுமான பணி பகுதி மக்கள், பயணியர் கடும் அவதி
கிடப்பில் நிழற்குடை கட்டுமான பணி பகுதி மக்கள், பயணியர் கடும் அவதி
ADDED : நவ 26, 2025 04:57 AM

கீழச்சேரி: கீழச்சேரியில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள், பயணியர்அவதிப்பட்டு வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கீழச்சேரி ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை சேதமடைந்தது.
மேலும் இப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகளும் நடந்து வந்த நிலையில், சேதமடைந்த நிழற்குடை அகற்றப்பட்டது.
தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் நிழற்குடை அமைக்கப்படாததால் பகுதி மக்கள் வெயில், மழையில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து திருவள்ளூர் தி.மு.க., --- எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென கீழச்சேரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
l பள்ளிப்பட்டு ஒன்றியம், வடகுப்பம் அடுத்த சாமிநாயுடு கண்டிகையில் இருந்து பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை செல்லும் நெடுஞ்சாலையில், பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்த கிராமத்தினர், இந்த நிழற்குடையில் காத்திருந்து பேருந்து பயணம் மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஏப்., மாதம் இந்த நிழற்குடை மீது கார் ஒன்று மோதிய விபத்தில், நிழற்குடை இடிந்து சேதம் ஆனது.
அதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அந்த நிழற்குடை இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இதுவரை புதிய நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால், சாமிநாயுடுகண்டிகை கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்துக்காக, மழையிலும், வெயிலிலும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, மீண்டும் புதிய நிழற்குடையை பேருந்து நிறுத்தத்தில் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

