/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
7 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்த சோதனைச்சாவடி கட்டடம்
/
7 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்த சோதனைச்சாவடி கட்டடம்
7 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்த சோதனைச்சாவடி கட்டடம்
7 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்த சோதனைச்சாவடி கட்டடம்
ADDED : ஜூன் 27, 2025 01:59 AM

கும்மிடிப்பூண்டி:மாநில எல்லையோர சோதனைச்சாவடி வளாகத்தில், ஏழு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத கட்டடம் சேதமடைந்து, பலவீனமான நிலையில் உள்ளது.
சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், 2018 ஜூன் மாதம், மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.
இங்கு போக்குவரத்து துறை, வனத்துறை, போலீசார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், வாகன தணிக்கை மற்றும் சோதனை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
போக்குவரத்து துறையின் பராமரிப்பில் சோதனைச்சாவடி கட்டடங்கள் உள்ளன. ஒரு கட்டடம், போக்குவரத்து துறைக்கும், மற்றொரு கட்டடம் மற்ற துறையினருக்கு என கட்டப்பட்டது.
இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தது முதல் சோதனைச்சாவடி முழுமையாக இயங்காததால், இங்குள்ள பல கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் மூடி கிடக்கின்றன.
இதனால், தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் மார்க்கத்தில் உள்ள சோதனைச்சாவடி கட்டடம் ஒன்றின் சுவர் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
மேலும், பல இடங்களில் விரிசலடைந்து, பலவீனமான நிலையில் உள்ளது. திறக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், கட்டடம் பழுதாகி இருப்பதை கண்டு, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, போக்குவரத்து துறையினர் துரிதமாக செயல்பட்டு, கட்டட சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.