/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்
/
பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்
பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்
பிளாஸ்டிக் கழிவு தின்று வண்டலுாரில் பலியான மான்கள்
ADDED : பிப் 17, 2025 11:04 PM

வண்டலுார், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் உள்ள காப்புக்காட்டில் பிளாஸ்டிக் கழிவை தின்று மான்கள் இறக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரில் உள்ள காப்புக்காட்டில், 1,200க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளன.
காப்புக் காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலி இல்லாததால், மான்கள் அவ்வப்போது வழி தவறி வெளியேறி, ஊருக்குள் வந்து விடுகின்றன.
பின், வனத்துறை ஊழியர்கள் மீட்டு, மீண்டும் காப்புக் காட்டிற்குள் விடுவதும் வழக்கம்.
காட்டிலிருந்து வெளியேறும் மான்களில் சில, வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவை உண்டு உயிரிழப்பதும் தொடர்கிறது.
இந்நிலையில், வண்டலுார் குப்பைக் கிடங்கு அருகே, மூன்று புள்ளி மான்கள் இறந்து கிடப்பதாக, வனத்துறை ஊழியர்களுக்கு, நேற்று காலை தகவல் வந்தது.
சம்பவ இடதிற்கு சென்ற ஊழியர்கள், உயிரிழந்த மூன்று மான்களின் உடல்களையும் மீட்டனர்.
பின், கால்நடை மருத்துவர்கள் வந்து, பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது பிளாஸ்டிக் கையுறை, பிளாஸ்டிக் கயிறு, பிளாஸ்டிக் கழிவு மான்களின் இரைப்பைக்குள் இருந்தன.
உயிரிழந்த மான்கள் மூன்றும் வயதானவை எனவும், பிளாஸ்டிக் கழிவுகளை உண்டதே இறப்பிற்கு காரணம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின், மான்களின் உடல்கள், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன.

