/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழன்று ஓடிய ரயில் இன்ஜின் 2 மணி நேரம் சேவை பாதிப்பு
/
கழன்று ஓடிய ரயில் இன்ஜின் 2 மணி நேரம் சேவை பாதிப்பு
கழன்று ஓடிய ரயில் இன்ஜின் 2 மணி நேரம் சேவை பாதிப்பு
கழன்று ஓடிய ரயில் இன்ஜின் 2 மணி நேரம் சேவை பாதிப்பு
ADDED : அக் 03, 2024 02:28 AM

பொன்னேரி,:ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி நேற்று சரக்கு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் சென்றபோது, இரு பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பு கொக்கி உடைந்தது.
இதன் காரணமாக, இன்ஜினுடன் ஒரு பெட்டி மட்டும் தனியே கழன்று ஓடியது. சுதாரித்த ஓட்டுனர் உடனடியாக, மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தினார்.
இதனால், சென்னை நோக்கி செல்லும் ரயில் பாதையில் ரயில் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. புறநகர் மின்சார ரயில்கள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், கழன்று நின்ற சரக்கு பெட்டிகளை வேறு ஒரு இன்ஜினுடன் இணைத்து ஓரமாக நிறுத்தினர். அதன்பின், பிரிந்து சென்ற பெட்டியில் உடைந்த கொக்கியை அகற்றிவிட்டு, புதிய கொக்கி பொருத்தப்பட்டது. பின், சரக்கு பெட்டிகளுடன் இன்ஜினை இணைத்து இயக்கினர்.
இதனால், சென்னை நோக்கி செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.