/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாய் படுமோசம் விவசாயம் பாதிக்கும் அபாயம்
/
நீர்வரத்து கால்வாய் படுமோசம் விவசாயம் பாதிக்கும் அபாயம்
நீர்வரத்து கால்வாய் படுமோசம் விவசாயம் பாதிக்கும் அபாயம்
நீர்வரத்து கால்வாய் படுமோசம் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஏப் 14, 2025 01:21 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்டது விநாயகபுரம் கிராமம். இங்கு, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில்.
இப்பகுதிவாசிகளின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், நந்தியாற்றில் இருந்து உபரிநீர், விநாயகபுரம் ஏரிக்கு செல்ல வசதியாக நீர்வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிராமம் அருகே நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் தேங்கும் வகையில், சிறிய அளவில் தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமத்தில் குடிநீர் பிரச்னை மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாததால், தற்போது கால்வாயில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், தண்ணீரும் மாசுபடுவதுடன், நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விநாயகபுரம் நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.