/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்களத்தின் கூரை மாயம்: சமூக விரோதிகள் அட்டூழியம்
/
நெற்களத்தின் கூரை மாயம்: சமூக விரோதிகள் அட்டூழியம்
நெற்களத்தின் கூரை மாயம்: சமூக விரோதிகள் அட்டூழியம்
நெற்களத்தின் கூரை மாயம்: சமூக விரோதிகள் அட்டூழியம்
ADDED : ஜூன் 06, 2025 02:34 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் விவசாயம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், நெல் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதற்கு அடுத்தபக்ஷடியாக கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்டவையும் பயிரிடப்படுகின்றன.
விவசாயிகள் விளைவித்த தானிய கதிர்களை பிரித்தெடுப்பதற்காக, கிராமங்களில் நெற்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நெற்களங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க களத்தின் ஒரு பகுதியில் கூரையுடன் தனி கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கதிரில் இருந்து பிரித்தெடுத்த தானியங்களை விவசாயிகள் மூட்டைகளாக அங்கேயே அடுக்கி வைத்து, மொத்தமாக கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் உள்ள தானிய கிடங்கில் கூரை மாயமாகியுள்ளது.
இதனால் மழை, வெயிலில் இருந்து தானியங்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, கிடங்கின் கூரையை சமூக விரோதிகள் நாசம் செய்ததாக கூறப்படுகிறது.
எனவே, அரசு திட்டத்தை நாசம் செய்யும் விதமாக செயல்படும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.