/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்
/
வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்
ADDED : மே 14, 2025 02:05 AM

திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது.
இந்த கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, தடைபட்டுள்ளது.
இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த கோவில் குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கோவில் குளத்தை துார்வாரி, கரைகளை சீரமைத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்திற்கு நீர் சேதகரமாகும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.