/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண்புழு உரக்கொட்டகை வீண் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
/
மண்புழு உரக்கொட்டகை வீண் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
மண்புழு உரக்கொட்டகை வீண் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
மண்புழு உரக்கொட்டகை வீண் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்
ADDED : ஏப் 21, 2025 02:32 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இலுப்பூர் ஊராட்சி. இங்கிருந்து போளிவாக்கம் செல்லும் நெடுஞ்சாலையோரம் மண்புழு உரம் தயாரிக்க, கடந்த 2017 - -2018ம் ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.
ஆனால், இந்த மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வீணாகியுள்ளது. இது, அப்பகுதி வாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மண்புழு உரக்கொட்டகை பராமரிப்பில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த மண்புழு உரக்கொட்டகையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.