/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மனு அளிக்க வந்த பாம்பு தெறித்து ஓடிய ஊழியர்கள்
/
மனு அளிக்க வந்த பாம்பு தெறித்து ஓடிய ஊழியர்கள்
ADDED : செப் 19, 2024 01:43 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை அலுவலக ஊழியர்கள் வழக்கம்போல் தங்களது பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
மதிய நேரத்தில் திடீரென அலுவலகத்திற்குள் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்தது. அங்கு, வேலை செய்துக் கொண்டிருந்த, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பாம்பை பார்த்ததும் அலறியடித்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து அலுவலக ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், காட்டுப்பகுதியில் விடப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.