sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி தாலுகாவை இரண்டாக பிரிக்க வலுக்கும் எதிர்பார்ப்பு! திருவாலங்காடு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?

/

திருத்தணி தாலுகாவை இரண்டாக பிரிக்க வலுக்கும் எதிர்பார்ப்பு! திருவாலங்காடு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?

திருத்தணி தாலுகாவை இரண்டாக பிரிக்க வலுக்கும் எதிர்பார்ப்பு! திருவாலங்காடு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?

திருத்தணி தாலுகாவை இரண்டாக பிரிக்க வலுக்கும் எதிர்பார்ப்பு! திருவாலங்காடு மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?


ADDED : மார் 18, 2025 12:52 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருத்தணி தாலுகாவை இரண்டாக பிரித்து, திருவாலங்காடை புதிய தாலுகாவாக உருவாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கை தற்போது வலுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா, திருத்தணி, திருவாலங்காடு உள்ளிட்ட இரண்டு ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளை கொண்டதாக உள்ளது.

இதன் நிர்வாக வசதிக்காக திருத்தணி, செருக்கனுர், பூனிமாங்காடு, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, மணவூர் என, ஆறு குறுவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

51 வருவாய் கிராமங்கள்


இந்த ஆறு குறுவட்டங்களில் முறையே, திருத்தணி - 21, செருக்கனூர் - 15, பூனிமாங்காடு - 11, கனகம்மாசத்திரம் - 12, திருவாலங்காடு - 16, மணவூர் - 12 என, 87 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், திருவாலங்காடு ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளில், 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.

இதில் களாம்பாக்கம், சின்னமண்டலி, ஜே.எஸ்.ராமாபுரம், பெரியகளக்காட்டூர், எல்.வி.புரம் உள்ளிட்ட கிராமவாசிகள் வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் பெறவும், நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும், 30 -- 50 கி.மீ., பயணித்து, திருத்தணி தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு தாலுகா அலுவலகம் அமைப்பதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவாலங்காடுக்கு சுலபமாக வந்து செல்லலாம் என, அவர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக, கலெக்டர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய் துறை தொடர்பான அரசு பணிகளையும், வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும்.

இதை, வட்டாட்சியர் தனக்கு கீழ் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தெரிவித்து, அதன்பின் அதை செயல்படுத்துவார்.

கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்போன்றவர்களின் பரிந்துரைகளின்படி, ஜாதி, வருவாய், இருப்பிட, வாரிசு, நிலம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.

அதிகாரம்


வட்டாட்சியமைப்புக்குள் மக்களிடையே பிரச்னைகள் ஏதும் வந்தால், சட்டம்- - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவாறு, முன்கூட்டியே செயல்படுவதற்கு இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும், வட்டாட்சியர் செயல்பட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவியல் நிர்வாக பணிகளில் வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல், வட்டத்தில் சட்டம் -- ஒழுங்கு பராமரித்தல், அவசர காலத்தில் இருப்பு பாதையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுத்தல், கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தை செயல்படுத்துதல், காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் வட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, வருவாய் துறையின் வசதிக்காக, சட்டம் -- ஒழுங்கு பராமரிக்கவும், மக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களைப பெற நீண்ட தூரம் அலைவதை தடுக்கவும், திருத்தணி தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, திருவாலங்காடில் புதிய தாலுகா அலுவலகத்தை அமைக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நிர்வாக வசதிக்காக பள்ளிப்பட்டு தாலுகாவை இரண்டாக பிரித்து, ஆர்.கே.பேட்டை தாலுகா உருவாக்கியதை போன்று, திருத்தணியை இரண்டாக பிரித்து திருவாலங்காடு தாலுகாவை உருவாக்க வேண்டும்.

திருவாலங்காடு வளர்ச்சி குன்றிய ஒன்றியமாக உள்ளது. தாலுகாவாக உயர்த்தும் போது, தொழில் வளம் பெருகவும், மக்களின் பொருளாதாரம் உயரவும் வழிவகுக்கும்.

தாலுகா அலுவலகம் 50 கி.மீ., தொலைவு

களாம்பாக்கம் மற்றும் ஜே.எஸ்.ராமாபுரத்தில் இருந்து, திருத்தணி தாலுகா அலுவலகம், 50 கி.மீ., தொலைவில் உள்ளது. சென்னைக்கும், திருத்தணிக்கும் எங்கள் கிராமத்தில் இருந்து ஒரே தொலைவு. எங்கள் கிராமத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்ல போக்குவரத்து வசதியில்லாததால் தினக்கூலி, விவசாயிகள், பெண்கள், முதியோர் பெரும் சிரமப்படுகின்றனர். ஆட்டோ வாயிலாக ஒருமுறை தாலுகா அலுவலகம் சென்றுவர, 300 - 500 ரூபாய் செலவாகிறது. திருவாலங்காடு மையப்பகுதியாக உள்ளதால், இங்கு தாலுகா உருவாக்கினால், மக்களின் அலைச்சல் குறைவதுடன், நிர்வாகமும் சீராக இருக்கும்.

- எம்.முரளி, 45, களாம்பாக்கம்.

பிரச்னைகள் அதிகரிப்பு

திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை, கனகம்மாசத்திரம், மணவூர், திருவாலங்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாக குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அது தொடர்பாக சட்ட பிரச்னைகளும், வருவாய்த் துறை பிரச்னைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருவாலங்காடை தாலுகாவாக பிரித்தால், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரிகள் மற்றும் மக்களின் அலைச்சல் குறையும்.

- வருவாய் துறை அதிகாரி, திருத்தணி.






      Dinamalar
      Follow us