/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிரம்பி வரும் பிச்சாட்டூர் ஏரி
/
நிரம்பி வரும் பிச்சாட்டூர் ஏரி
ADDED : நவ 14, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: தொடர் நீர்வரத்து காரணமாக, பிச்சாட்டூர் ஏரி, முழு கொள்ளளவை எட்டவுள்ளது.
ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர் ஏரி, சுருட்டப்பள்ளி அணைக்கட்டு ஆகிய நீர்நிலைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பிச்சாட்டூர் ஏரியின் முழு கொள்ளளவு, 1.81 டி.எம்.சி., நீர்மட்டம் 31 அடி.
தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும், 'மோந்தா' புயல் காரணமாக பலத்த மழை பெய்து, ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது.
நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, ஏரியில் 1.711 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு, 50 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

