/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவாலயங்களில் இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா
/
சிவாலயங்களில் இந்தாண்டின் முதல் சனிப்பிரதோஷ விழா
ADDED : ஜன 08, 2025 08:02 PM
ஊத்துக்கோட்டை:சிவாலயங்களில் ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி நாட்களுக்கு இரு தினங்களுக்கு முன் திரயோதசி திதியில் பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். உலகை காக்க வேண்டிய ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை ஆனதால், இந்நாளில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
இந்தாண்டின் முதல் சனிப் பிரதோஷ விழா, நாளை மறுதினம், கொண்டாடப்படுகிறது. சுருட்டப்பள்ளி சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் மாலை, 4:30 மணிக்கு மூலவர் வால்மிகீஸ்வரர், நந்திக்கு ஒரே நேரத்தில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.
பின்னர் மலர்மாலை, அருகம்புல் ஆகியவற்றால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்படும். இதைத் தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதேபோல, ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் சனிப்பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறும்.

