/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி ஒதுக்கியது ஏகாட்டூருக்கு சாலை அமைத்ததோ கடம்பத்துாருக்கு
/
நிதி ஒதுக்கியது ஏகாட்டூருக்கு சாலை அமைத்ததோ கடம்பத்துாருக்கு
நிதி ஒதுக்கியது ஏகாட்டூருக்கு சாலை அமைத்ததோ கடம்பத்துாருக்கு
நிதி ஒதுக்கியது ஏகாட்டூருக்கு சாலை அமைத்ததோ கடம்பத்துாருக்கு
ADDED : நவ 23, 2024 01:48 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் ஏகாட்டூர் ஊராட்சியில் சிமென்ட் கல் சாலை அமைக்க 2024-25ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 7.28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆனால் இந்த நிதியில் ஏகாட்டூர் ஊராட்சியில் சாலை சீரமைக்காமல் இதே பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரில் கடம்பத்துார் ஊராட்சிக்குப்பட்ட பகுதியில் அ.தி.மு.க., ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் உறவினர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் வகையில், 100 மீட்டர் துாரம் சிமென்ட் கல் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
ஏகாட்டூர் ஊராட்சி ஒதுக்கப்பட்ட நிதியை கடம்பத்துார் ஊராட்சியில் சிமென்ட் கல் சாலை போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இது ஏகாட்டூர் பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏகாட்டூர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடம்பத்துார் ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:
சிமென்ட் கல் சாலை குறித்து புகார் வந்துள்ளது. ஏகாட்டூர் ஊராட்சியில் போட வேண்டிய சிமென்ட் கல் சாலையை கடம்பத்துார் ஊராட்சி பகுதியில் போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்த தொகையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏகாட்டூர் ஊராட்சியில் சிமென்ட் கல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.