/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துாய்மை பணியாளருக்கான கிட் எப்போ சார் வழங்க உத்தேசம் ஒருமாதமாக அலுவலகத்தில் தேக்கம்
/
துாய்மை பணியாளருக்கான கிட் எப்போ சார் வழங்க உத்தேசம் ஒருமாதமாக அலுவலகத்தில் தேக்கம்
துாய்மை பணியாளருக்கான கிட் எப்போ சார் வழங்க உத்தேசம் ஒருமாதமாக அலுவலகத்தில் தேக்கம்
துாய்மை பணியாளருக்கான கிட் எப்போ சார் வழங்க உத்தேசம் ஒருமாதமாக அலுவலகத்தில் தேக்கம்
ADDED : ஜூலை 18, 2025 02:02 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் துாய்மை பணியாளருக்கான உபகரணங்கள் வந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யாததால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு துாய்மை பணியாளர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில், 280 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், கிராம ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குப்பையை சேகரித்து, அவற்றை தரம் பிரித்து, உரமாக மாற்றும் பணியை செய்கின்றனர். இதன் மூலமாக, கிராமம் துாய்மையடைவது உறுதி செய்யப்படுகிறது.
இதற்காக, அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மின் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தொட்டிகள், கையுறைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
மாதம் ஒருமுறை இவர்களுக்கு கையுறை, தலைக்கவசம், வழங்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு ஒருமுறை பாண்டு, மண்வெட்டி, கூடை, உள்ளிட்ட உபகரணங்கள், அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கான தொகுப்பு, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தன.
ஆனால் உபகரணங்கள் இதுவரை சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு சென்று சேரவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக புலம்புகின்றனர்.
கலெக்டர் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உபகரணங்கள் சென்று சேருவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.