ADDED : மே 22, 2025 10:19 PM
ஊத்துக்கோட்டை:கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று காலை தமிழக எல்லை, ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 2,500 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் துவக்கத்தில், ஜீரோபாயிபூண்ன்டிற்கு வினாடிக்கு, 50 கன அடி வீதம் வந்தது. அங்கிருந்து, 25 கி.மீட்டர் துாரமுள்ள பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு நேற்று காலை சேர்ந்தது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி., யில் 1.3 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடியில், 28.15 அடி உள்ளது. கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 115 கன அடி வந்து கொண்டு இருக்கிறது. இணைப்பு கால்வாய் வழியே. புழல் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டு இருந்த நீர் நிறுத்தப்பட்டது.