/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இணைப்பு சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
இணைப்பு சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஜூலை 03, 2025 02:43 AM

பொன்னேரி:சிறு பாலத்தின் இணைப்பு சாலைகள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் - கோளூர் நெடுஞ்சாலையில் வேம்பேடு, ஆவூர், கோளூர் ஆகிய இடங்களில், மழைநீர் செல்வதற்காக சிறு பாலங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றின் இருபுறமும், முறையாக இணைப்பு சாலைகள் அமைக்கப்படவில்லை. மேலும், இப்பகுதிகளில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. வாகன ஓட்டிகள் பாலங்களை கடக்கும்போது தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிறு பாலங்களின் அருகே இணைப்பு சாலைகளை தரமாக அமைப்பதில்லை. கரடு முரடாக இருக்கும் நிலையில், இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது முதுகுவலி ஏற்படுகிறது. வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து வரும் பெண்கள் கீழே விழுகின்றனர். இணைப்பு சாலைகளை தரமாக அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்க எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.