/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சகதி சூழ்ந்து தத்தளிக்கும் தாமரைகுளம் தார் சாலை
/
சகதி சூழ்ந்து தத்தளிக்கும் தாமரைகுளம் தார் சாலை
ADDED : ஜன 31, 2025 02:52 AM

ஆர்.கே.பேட்டைஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது தாமரைகுளம் கிராமம். ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, தாமரைகுளத்திற்கு இணைப்பு சாலை உள்ளது.
கிராமத்தினர், இந்த சாலை வழியாக, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், திருத்தணி, சித்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், தாமரைகுளம் கிராம மாணவர்கள், விடியங்காடு அரசு மேல்நிலை பள்ளிக்கும், இந்த வழியாகத் தான் வந்து செல்கின்றனர்.
இந்த சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இந்த தார் சாலையை ஒட்டி தாமரைகுளம் ஏரியும் அமைந்துள்ளது.
பராமரிப்பு இல்லாத இந்த சாலையில், தற்போது ஏரியின் ஊற்று நீர் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை மேலும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
சகதியாக உள்ள இந்த சாலை வழியாக பயணிக்கும் பகுதிவாசிகள், இதனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில், இந்த சாலையை ஒட்டி கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அதே போல், இந்த தார் சாலையையும் கான்கிரீட் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.