/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பயனின்றி வீணாகும் நகராட்சி அலுவலக புதிய கட்டடம்
/
பொன்னேரியில் பயனின்றி வீணாகும் நகராட்சி அலுவலக புதிய கட்டடம்
பொன்னேரியில் பயனின்றி வீணாகும் நகராட்சி அலுவலக புதிய கட்டடம்
பொன்னேரியில் பயனின்றி வீணாகும் நகராட்சி அலுவலக புதிய கட்டடம்
ADDED : ஜன 27, 2025 02:21 AM

பொன்னேரி:பொன்னேரி பேரூராட்சியாக இருந்து, 2021ல் நகராட்சியாக தரம் உயர்ந்தது. பேரூராட்சியாக இருந்தபோது, 18 வார்டுகள் இருந்தன. நகராட்சியாக தரம் உயர்ந்த பின், வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 18ல் இருந்து, 27ஆக அதிகரித்தது. 2022ம் ஆண்டு பிப்ரவரியில் நகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் மாதம் முதல் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
நகராட்சியாக தரம் உயர்ந்தபின், சுகாதார மேற்பார்வையாளர், நகராடசி பொறியாளர், உதவி அலுவலர்கள் உள்ளிட்ட கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் அலுவலக கட்டடம் போதுமானதாக இல்லை. அதேபோன்று, கவுன்சிலர்கள் கூட்டரங்கமும் நெருக்கடியான இடத்தில் செயல்படுகிறது.
அதை தொடர்ந்து, 2023ல், நகராட்சிக்கு, 1 கோடி ரூபாயில், தரை மற்றும் முதல் தளம் என, புதிய கூடுதல் அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
அதற்கான கட்டுமான பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கட்டடத்தை திறந்து வைத்தார்.
அதேசமயம் கட்டடம் இதுநாள் பயனுக்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. பழைய கட்டடத்தில் இடநெருக்கடியில் அலுவலர்கள் சிரமத்துடன் பணிபுரிகின்றனர்.
அலுவலகம் வரும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கட்டடம் அமைந்தும், பயனின்றி வீணாகி வருவது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய அலுவலக கட்டடத்தில் கூட்டரங்கத்திற்கான கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவில்லை. அதற்கான பணிகள் முடிந்ததும் பயனுக்கும் வரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக கூடுதல் உள்கட்டமைப்பு பணிகளை முடித்து கட்டடத்தை பயனுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.