/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
/
கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
ADDED : டிச 12, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவிலில், ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் வற்றாத தீர்த்த கிணறு மற்றும் நீராழி மண்டபத்துடன் குளம் அமைந்துள்ளன.
இந்நிலையில், இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பாலாலயம் நேற்று ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான சிறப்பு வழிபாடு, காலை 10:00 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.