/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி
/
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி
நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தம் மேல்நல்லாத்துார் பகுதியினர் அவதி
ADDED : பிப் 16, 2024 10:04 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி.
இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இரு பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக சென்று வருகின்றனர்.
இந்த சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் போது சாலையோர நிழற்குடை அகற்றப்பட்டது.
பின் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தும் நிழற்குடை அமைக்கப்படாததால் பகுதிவாசிகள் வெயில் மற்றும் மழை நேரங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.