/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை தொட்டி கட்டட பணி இரண்டு ஆண்டுகளாக 'பெண்டிங்' குடிநீருக்கு அல்லல்படும் பானம்பாக்கம் மக்கள்

ADDED : செப் 23, 2024 12:33 AM

கடம்பத்துார்: கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சியில் பானம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் பயன்பாடில்லாமல் உள்ளது. இதையடுத்து, செஞ்சி ஊராட்சி தலைவர் அறிவழகி கோரிக்கையின்படி, 7 லட்சம் ரூபாயில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட, அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, 2022- 2023ம் ஆண்டு எஸ்.வி.எஸ்., திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க கட்டும் பணி, ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் குழாய் பொருத்தும் பணி ஆகிய பணிகள், கடந்த 2022ம் ஆண் ஜூலை மாதம் துவங்கியது.
இதில், குழாய் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தூண்கள் மட்டும் கட்டப்பட்ட நிலையில், இரு ஆண்டுகளாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், பானம்பாக்கம் பகுதிவாசிகள் குடிநீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், 'பணிகள் நடைபெறும்' என, அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.
எனவே, செஞ்சி ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு செய்து, புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணியை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பானம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.