/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு
/
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் ஆக்கிரமிப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வு
ADDED : ஜூன் 07, 2025 02:44 AM

ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு, 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
இந்த பேரூராட்சியை சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு தினமும் ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், புத்துார், ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே பயணிக்கின்றன.
இப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசர மருத்துவ உதவிக்கு செல்லும், '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கி வருகின்றன.
சமீபத்தில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி இறுதி நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாரிடம் கேட்ட போது, 'விரைவில் சாலை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்' என தெரிவித்தார்.
எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன், கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.