/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
/
விசாரணைக்கு வந்தவர் தற்கொலை முயற்சி
ADDED : டிச 09, 2024 02:28 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய், 24; இவர்; ஆறு மாதத்திற்கு முன் வெடிமருந்து தயாரித்து அதை வெடிக்க செய்து வீடியோ எடுத்து வெளியிட்டார். இதையடுத்து, திருத்தணி போலீசார் இவரை கைது செயது சிறையில் அடைத்தனர்.
இவர், சில தினங்களுக்கு முன் விடுதலையானார். இந்நிலையில் நேற்று காலை, திருத்தணி போலீஸ் எஸ்.ஐ., குணசேகர் மற்றும் போலீசார் சந்தேகத்தின்படி, சஞ்சய், 24 சூர்யா, 23, அருண், 19, உட்பட ஆறு பேரை, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், சஞ்சய் மீது கொலை வழ்க்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை சிறையிலடைக்க முடிவு செய்தனர்.
இதையறிந்த சஞ்சய், போலீசார் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் காவல் நிலையத்திலிருந்த ஸ்டேப்ளர் பின்னை சாப்பிட்டார்.
இதையடுத்து, போலீசார் அவரை திருத்தணி மருத்துவமனையில் முதலுதவிக்குப்பின் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.