/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுக்கூடமாக மாறிய பெருவாயல் நடைபாலம்
/
மதுக்கூடமாக மாறிய பெருவாயல் நடைபாலம்
ADDED : செப் 06, 2025 02:55 AM
கும்மிடிப்பூண்டி:தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள நடைபாலம், இரவு நேரத்தில் மதுக்கூடமாக மாறி வருவதால், போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெருவாயல் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், சாலையின் குறுக்கே இரும்பு நடைபாலம் உள்ளது. பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்பூங்கா தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நடைபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் நடைபாலத்தை சிலர் மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நடைபாலத்தின் படிகளில் காலியான பாட்டில்கள் மற்றும் உடைந்த பாட்டில்கள் எப்போதும் காணப்படும்.
எனவே, கவரைப்பேட்டை போலீசார், இரவு நேரத்தில் நடைபாலத்தை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.