/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய் பதிப்பு பணி அரைகுறை வேண்பாக்கத்தில் 'மெகா' பள்ளம்
/
குழாய் பதிப்பு பணி அரைகுறை வேண்பாக்கத்தில் 'மெகா' பள்ளம்
குழாய் பதிப்பு பணி அரைகுறை வேண்பாக்கத்தில் 'மெகா' பள்ளம்
குழாய் பதிப்பு பணி அரைகுறை வேண்பாக்கத்தில் 'மெகா' பள்ளம்
ADDED : அக் 04, 2024 02:18 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில், வேண்பாக்கம் பகுதியில் குழாய் பதிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய் பதித்த பின், மண்கொட்டி மூடப்பட்டது. அப்பணிகள் சரிவர மேற்கொள்ளாத நிலையில், மழையின்போது மண்கொட்டிய பகுதிகளில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இது, அங்குள்ள வியாபாரிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பள்ளங்களை சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்.
மேலும், மாநில நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களும் தடுமாற்றத்துடன் செல்கின்றன. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியரும் சிரமத்துடன் கடக்கின்றனர்.
குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் மட்டும் பள்ளங்கள் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பள்ளி மாணவியர் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம், அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் நேரிடும் முன், குழாய் பதிப்பு பணிகளுக்கு தோண்டப்பட்டு, சரிவர மூடாத இடங்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.