/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்
/
'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்
'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்
'குடி'மகன்கள் அட்டகாசம் திருத்தணியில் தொடரும் அவலம்
ADDED : நவ 26, 2024 08:08 PM
திருத்தணி:திருத்தணி நகராட்சி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் அருகே, கடப்பா டிரங்க் ரோடு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில், சில நாட்களாக 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, அவ்வழியாக செல்வோரிடம் போதையில் தகராறு செய்கின்றனர்.
குறிப்பாக, பேருந்து நிலையத்தில், அதிகாலை 4:30 மணி முதலே 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியரிடம் தகராறு செய்கின்றனர்.
மேலும், இந்த இடங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை, அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், நகரவாசிகள் மற்றும் வெளியூர் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, திருத்தணி போலீசார் இப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். 'குடி'மகன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.