/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி நிலத்தடி நீரின் தரம் கேள்விக்குறி
/
கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி நிலத்தடி நீரின் தரம் கேள்விக்குறி
கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி நிலத்தடி நீரின் தரம் கேள்விக்குறி
கழிவுநீர் குட்டையான தாமரை ஏரி நிலத்தடி நீரின் தரம் கேள்விக்குறி
ADDED : ஜூலை 07, 2025 11:12 PM
கும்மிடிப்பூண்டி, தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தரத்தை பாதிக்கும் வகையில், அங்குள்ள தாமரை ஏரி மாசடைந்து, கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. நீர்வளத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியை பாதுகாக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தாமரை ஏரி, 5.67 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரியை நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
தேர்வழி ஏரியின் நிலத்தடி நீர் தரமாக இருக்கும் என்பதால், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள், குடிநீருக்காக தேர்வழி கிராமத்தை நாடி வருகின்றனர்.
இந்நிலையில், தாமரை ஏரியில், கோட்டக்கரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
தற்போது, தாமரை ஏரியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், தேர்வழி கிராமத்தின் நிலத்தடி நீரின் தரம் குறைந்து வருவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வழி கிராம நிலத்தடி நீரின் தரத்தை பாதுகாக்க நீர்வளத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கழிவுநீர் திறந்து விடுவதை தடுத்து, ஏரியை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.