/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை மணவாளநகரினர் அவதி
/
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை மணவாளநகரினர் அவதி
ADDED : பிப் 03, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர். இப்பகுதியில் உள்ள பல தெருக்கள் ஜல்லி கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவியர் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர், ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால், விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்கவும், காலி மனைகளில் தேங்கியுள்ள குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.