/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கற்கள் பெயர்ந்த சாலையால் திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி
/
கற்கள் பெயர்ந்த சாலையால் திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி
கற்கள் பெயர்ந்த சாலையால் திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி
கற்கள் பெயர்ந்த சாலையால் திருப்பந்தியூர் பகுதிவாசிகள் அவதி
ADDED : அக் 28, 2024 01:31 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி.
இந்த ஊராட்சிக்குட்பட்ட பண்ணுார் பகுதியிலிருந்து திருப்பந்தியூர் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
இந்த சாலை கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஒன்றிய சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து சாலை புதருக்குள் மாயமாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை ஒன்றிய நிர்வாத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருப்பந்தியூர் ஊராட்சியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.