/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூங்கா சுற்றுச்சுவரில் விரிசல் சாலையில் விழும் அபாயம்
/
பூங்கா சுற்றுச்சுவரில் விரிசல் சாலையில் விழும் அபாயம்
பூங்கா சுற்றுச்சுவரில் விரிசல் சாலையில் விழும் அபாயம்
பூங்கா சுற்றுச்சுவரில் விரிசல் சாலையில் விழும் அபாயம்
ADDED : பிப் 16, 2025 03:52 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி செல்லும் சாலையில், பேரூராட்சி அலுவலகம் உள்ளது. பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி, காந்தி பூங்கா அமைந்துள்ளது.
திறந்தநிலையில் இருந்த இந்த பூங்காவில், சமூகவிரோதிகள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், அதிருப்தி அடைந்த காந்தியவாதிகள் சிலர், சமூக அக்கறையுடன் சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் எழுப்பினர். தற்போது, இந்த பூங்காவிற்குள் யாரும் செல்வது இல்லை.
இந்நிலையில், பூங்காவின் சுற்றுச்சுவர் விரிசல் விட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாளுக்குநாள் சாய்ந்துவரும் சுற்றுச்சுவர்,எந்த நேரத்திலும் சாலையில் விழ நேரிடலாம் என்பதால், அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். சுற்றுச்சுவரை உறுதியாக சீரமைக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

