/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் செல்லும் வழி அடைப்பு சாலையில் தேங்கும் தண்ணீரால் அவதி
/
மழைநீர் செல்லும் வழி அடைப்பு சாலையில் தேங்கும் தண்ணீரால் அவதி
மழைநீர் செல்லும் வழி அடைப்பு சாலையில் தேங்கும் தண்ணீரால் அவதி
மழைநீர் செல்லும் வழி அடைப்பு சாலையில் தேங்கும் தண்ணீரால் அவதி
ADDED : ஆக 20, 2025 02:14 AM

ஊத்துக்கோட்டை:போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு பக்கமும் கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வழி அடைத்து, கான்கிரீட் கலவை பூசப்பட்டு உள்ளது. இதனால், மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியுள்ளது.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா, கர்நுால், நந்தியால், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே சென்று வருகின்றன.
தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் இச்சாலையின் இரண்டு பக்கமும், மழைநீர் செல்லும் வழி அடைக்கப்பட்டு, கான்கிரீட் கலவை பூசப்பட்டுள்ளது.
இதனால், மழை பெய்யும் போது, தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தண்ணீரில்நடந்து சென்று வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் தகவல் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில், சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.