/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரணகுழியாக மாறிய சிறுபாலம் வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி
/
மரணகுழியாக மாறிய சிறுபாலம் வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி
மரணகுழியாக மாறிய சிறுபாலம் வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி
மரணகுழியாக மாறிய சிறுபாலம் வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஏப் 11, 2025 02:06 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள மணவாளநகர் பகுதியில் அண்ணா நகர், கபிலர் நகர், அழகிரி தெரு, கண்ணகி தெரு, அம்மன் தெரு போன்ற 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
இப்பகுதியில் அண்ணாநகர் பகுதியில் ம.பொ.சி. மற்றும் மதியழகன் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள சிறுபாலம் சேதமடைந்துள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த சிறு பாலம் குறித்து ஊராட்சி நிர்வாகம் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.